திமுகவின் 15ஆவது உட்கட்சி தேர்தல் தொடங்கியுள்ளது

திமுக உட்கட்சி தேர்தல் இன்று தொடங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

5 மாதங்களுக்கு மேலாக இந்த தேர்தலானது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், மாநகரம் வாரியாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மாவட்ட கழகம், தலைமை கழகம், பொதுக்குழு, செயற்குழு என ஒவ்வொரு பொறுப்புகளுக்கும் படிப்படியாக இந்த தேர்தலானது நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

முதற்கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூர், ஒன்றிய, கழகத்திற்கும் தேர்தல் நடைபெறும்.

இதற்கு பின்னர் புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பொறுப்புகளுக்கு திமுக தலைமை நியமனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய ஒரு நிலையில், இந்த தேர்தல் மூலமாக தங்களுக்கான நிர்வாகிகளை அவர்களே தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது.

உட்கட்சி தேர்தலை சுமூகமான முறையில் நடத்த திமுக தலைமை திட்டமிட்டு அதற்கேற்ப அந்தந்த பகுதிகளுக்கான பிரதிநிதிகளை நியமித்து தேர்தலை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு வரவுள்ள நிலையில் கட்சியை பலப்படுத்துவதற்கும், நிர்வாக தலைமையை உறுதி படுத்துவதற்கும் என இந்த தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே முடித்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு திமுக தயாராகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே