மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை சுமார் 35ஆயிரத்து 298 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் பேசிய அவர், ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்துள்ளதால் மாநில அரசுகளுக்கான இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஜிஎஸ்டி வரி வருவாயை உயர்த்துவது குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து வரும் 18-ஆம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பட்ஜெட் தயாரிப்பை முன்னிட்டு பல்வேறு துறையினருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் பொதுமக்களும் பட்ஜெட்டுக்கான தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.