அயோத்தியில் நான்கு மாதங்களுக்குள் பிரம்மாண்டமான ராமர்கோயில் கட்டப்படும் – அமித்ஷா

அயோத்தியில் நான்கு மாதங்களுக்குள் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.

மேலும், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

ஜார்கண்ட் மாநிலம் பாகல்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித் ஷா, அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகி விட்டதாக தெரிவித்தார்.

மேலும் அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சிறப்பான தீர்ப்பளித்து உள்ளதாகவும்; அடுத்த நான்கு மாதங்களுக்குள் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும் என்றும் அமித் ஷா கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே