ஷிகர் தவானின் ஸ்டெம்பிங்கை தவறிவிட்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூவ் வேட் தோனியை போன்று வேகமில்லை என்று மைதானத்தில் பேசிய ஆடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.

அதை தொடர்ந்து டி20 தொடரில் முதல் போட்டியை 11 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிட்னி மைதானத்தில் தொடங்கிய 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் காயம் காரணமாக இன்றையப் போட்டியில் விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக மேத்யூவ் வேட் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 194 ரன்கள் எடுத்தது.

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி துரத்தியது. கடைசி ஒவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டிய 2 சிக்சர்கள் விளாசி அணியை வெற்றியடைய செய்தார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தவான் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய வீரராக இருந்தார்.

தவான் 39 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டெம்பிங் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் ரிப்ளேவில் ஸ்டெம்பிங் வாய்ப்பை நூழையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான மேத்யூவ் வேட் தவறவிட்டது தெரிந்தது.

சற்று வேகமாக செயல்பட்டு இருந்தால் தவான் அவுட்டாகி இருப்பார்.

அதன் பின் தவானிடம் மேத்யூவ் வேட் பேசுகையில், தோனி அளவுக்கு வேகமில்லை என்றார்.

அதற்கும் தவானும் ஆம் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

இந்த ஆடியோ ஸ்டெம்பில் இருந்த மைக்கில் பதிவாகியது. இந்த வீடியேவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே