வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா – வங்கதேசம் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்தது.
இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேசம் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் சுருண்டது.
இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், ரோகித் சர்மாவும் களம் இறங்கினர்.
ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
புஜாரா நிதனமாக விளையாடி 54 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்ட்ன விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் நிலைத்து நின்று விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
மயங்க் அகர்வாலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது.
மயங்க் அகர்வால் 243 ரன்களும், ரஹானே 86 ரன்களும், ஜடேஜா 60 ரன்களும் குவித்தனர்.
இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் சிக்கி திணறியது.
ஷமி, உமேஷ் யாதவ், இஷாந் சர்மா வேகத்தில் வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
இறுதியாக வங்கசேத அணி 2வது இன்னிங்சில் 150 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன் மூலம் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.