இது மாஸ்டர் 3rd லுக் கா?? பாகுபலியா?? கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் 3rd லுக் வெளியான நிலையில், இந்த போஸ்டர் வடிவமைப்பை பார்த்த நெட்டிசன்கள் பாகுபலியை மீண்டும் பார்த்தது போன்று உள்ளது என இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர். 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தை XB க்ரியேட்டர்ஸ் தயாரிக்க விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

திரைப்படத்தின் ஒளிப்பதிவை சத்திய சூர்யன் மேற்கொள்ள அனிருத் இசையமைத்து வருகிறார். 

சம்மர் ட்ரீட்டாக படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால் படத்தின் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

அதன்படி ஏற்கனவே வெளியான 2 போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால், வெளியான 2 போஸ்டரில் ஒன்றில் கூட விஜய் சேதுபதியின் லுக் வெளியாகாதது அவரின் ரசிர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. 

இதனையடுத்து படத்தின் 3வது போஸ்டர் இன்று வெளியானது.

இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரின் லுக்கும் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி விஜய் மற்றும் விஜய் சேதுபதி எதிர் எதிர் திசையில் ஆக்ரோஷமாக பார்க்கும் போஸ்டரை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.

இது குறித்த ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் நிலையில், மற்றொரு புறம் இந்த போஸ்டருடன் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் பிரபாஸ் மற்றும் ரானா ஆகியோர் இடம்பெறும் குறிப்பிட்ட காட்சியை  ஒப்பிட்டு இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே