கரோனா தடுப்பூசி குறித்து பேசியதாக பதிவான வழக்கில் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதில் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் முழுமையாக இல்லை என்பதால், புதிய மனு தொடரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விவேக், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,

கரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே