125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாஸ்ஸான சாதனை படைத்த ‘காந்த கண்ணழகி’…!

அண்மையில் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் டி. இமான் இசையமைத்திருந்தார்.


தற்போது இந்த படத்தில் இடம் பெற்ற காந்த கண்ணழகி பாடல் யூடுபில் 125 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கொண்டாடப்பட்டது. இந்த பாடலை அனிருத் மற்றும் நீதி மோகன் பாடியிருந்தார்கள். தற்போது இந்த செய்தியை டி. இமான் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Tags :

SivaKarthikaeyan| GaandaKannazhagi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே