குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐதராபாத்தில் பிரம்மாண்ட பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐதராபாத்தில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரம்மாண்ட பேரணி நடத்தினர். 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தர்ணா சவுக் பகுதியில் நடைபெற்ற பேரணியில், இஸ்லாமிய அமைப்புகள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் பங்கேற்றனர்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர்.  

பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் ஐதராபாத்தில் கடைகள், வணிகவளாகங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

அமைதியாக பேரணி நடந்ததால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

எனினும் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே