புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்துப்போட்டி..!!

புதுச்சேரி மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையடுத்து அம்மாநிலத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 14 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. 

அதன்படி, புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை தொகுதியில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அந்த தொகுதியில் சரவணன் போட்டியிடுகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே