கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேரடியாக OTT தளத்தில் வெளியாகவுள்ள ‘PENGUIN’ திரைப்படத்தின் டீசர் ஜுன் 8ம் தேதி வெளியீடு..

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் படம் ‘பெண்குயின்’. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள பென்குயின் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் ஜூன் 8ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. 

அதன் பிறகு இந்த படம் OTT தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜூன் 19ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே