காதல் திருமணம் செய்த வாலிபர் தாக்குதல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே E.புதுக்கோட்டையை சேர்ந்த காதல் திருமணம் செய்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள E.புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் 45 வயதுள்ள அய்யனார் மகன் சேகர். இவருடைய 24 வயதுள்ள மகள் காயத்திரி. அதே ஊரைச் சேர்ந்த சிவராஜ் மகன் 24 வயதுள்ள ராஜ் என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களுடைய திருமணம் 2019 – ஆகஸ்ட் 15 தேதி அன்று பெற்றோர்களுடைய சம்மதமில்லாமல் நடந்ததால் அன்று முதல் பெண்ணின் பெற்றோருக்கும், ராஜ் என்பவருக்கும் விரோதம் ஏற்பட்டது.

அன்று முதல் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் இன்று ராஜ் தனது இருசக்கர வாகனத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள தனியார் மளிகை கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கும் போது, ராஜ் என்பவரை பின்தொடர்ந்து வந்த அய்யனார் மகன் சேகர், சேகர் மகன் 26 வயதுள்ள பிரகாஷ் மற்றொரு மகன் 24 வயதுள்ள ராஜேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையை கொண்டு கடுமையான தாக்கியுள்ளார்கள்.

இத்தாக்குதலில் நிலைகுலைந்த ராஜ் என்பவர் சத்தம் போடவே அங்கிருந்து மூவரும் தப்பி ஓடிவிட்டார்கள்.

தாக்குதலில் காயம் பட்ட நபரை 108 வாகனத்தின் மூலமாக மூலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் பற்றி பெரியகுளம் காவல்துறை அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றார்கள்.

பெரியகுளம் பகுதியில் புதுவருடபிறப்பு அன்று கொலை நடந்ததையடுத்து, ஆட்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இச் சம்பவம் நடந்திருப்பதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பயத்தையும் உண்டாக்கி இருக்கிறது.

நமது செய்தியாளர் : C . பரமசிவம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே