பாலியல் தொல்லை : +2 மாணவி தற்கொலை..!! அதிரவைக்கும் கடிதம்..!!

கரூர் மாவட்டம், தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது பள்ளி மாணவி நேற்று மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய நிலையில், தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தற்கொலை கொண்டுள்ளார்.

தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை என்னும் தகவல் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்மீது வெங்கமேடு காவல் நிலைய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி எழுதிய கடிதம்

கோவை தொடர்ந்து கரூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடிதம் மற்றும் டைரி செல்போன் உள்ளிட்டவைகளை வெங்கமேடு போலீஸார் கைப்பற்றி தகவலை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளியில் மாணவி பயின்று வருவதால் பள்ளி ஆசிரியர், மாணவர், தலைமையாசிரியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவுசெய்துள்ளனர்.

‘Sexual Harassment -ஆல சாகுற கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும். என்னை யாரு இந்த முடிவை எடுக்கவெச்சான்னு சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில வாழ ஆசைப்பட்டேன். இப்போ பாதியிலேயே போறேன். இன்னொரு ஜென்மத்துல இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணனும்னு ஆசை. ஆனா முடியாதில்ல.

I love you Amma

Chithappa, mani mama, ammu உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனா நான் உங்ககிட்ட சொல்லாமப் போறேன். இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது.

sorry.

மச்சான் Sorry.” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே