வேலூரில் ரூ.1,500க்கு இ-பாஸ் விற்பனை செய்த நபர் கைது…!!

வேலூரில் ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் இ-பாஸ் வழங்கப்படும் என விளம்பரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி இ-பாஸ் விவகாரத்தில் ஈடுபட்ட ஜெகதீசன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஒரு இ-பாஸ் பெற்று தர 2,500 ரூபாய் வரை வசூல் செய்தது அம்பலமாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ம் கட்ட தளர்வுகள் அமலில் உள்ளன. இருப்பினும், தமிழகம் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.

மேலும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ, மண்டலத்திற்கோ அல்லது பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமானால் இ-பாஸ் அவசியம் என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பணம் வாங்கிக்கொண்டு இ-பாஸ் பெற்று தருவது போன்ற மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே