கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.

பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில், தோனிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு புகழாரத்தை சூட்டியுள்ளார்.

அதில், நீங்கள் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு இருக்கிறீர்கள் என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

விக்கெட் கீப்பிங், சிறந்த தலைமை பண்பு திறமைக்காக வரலாற்றில் உங்களது பெயர் நிலைத்து நிற்கும் எனவும் கடந்த வருடங்களில் தோனி விளையாடியது பெருமைமிக்கது எனவும் கூறியிருந்தார்.

அவரது ஓய்வு குறித்து 130 கோடி இந்தியர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், தானும் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இதற்கு தோனி பிரதமர் அனுப்பிய வாழ்த்து மடலை ட்விட்டரில் பகிர்ந்து “கலைஞன், ராணுவ வீரர் மற்றும் ளையாட்டு வீரர் போன்றவர்கள் விரும்புவது அவர்களுடைய கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் பிறரிடம் இருந்து கிடைக்கின்ற பாராட்டுகள் தான். என்னை வாழ்த்திய, பாராட்டியதற்கு மோடி அவர்களுக்கு நன்றி,” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே