பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது.

இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து தற்போது அவருக்கு எக்ஸ்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே எஸ்.பி.பி கொரோனாவிலிருந்து பூரண நலம்பெற வேண்டி, இயற்கை அன்னையை பிரார்த்திக்கும் வகையில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனைத்து திரைப்பட நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள், பெப்சி அமைப்பினர், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடக கலைஞர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு பிரார்த்தனை செய்யுமாறு பாரதிராஜா கேட்டுக்கொண்டிருந்தார். 

இதனையடுத்து இந்த கூட்டுப்பிரார்த்தனையில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஒரு பாடகருக்காக சமூக வலைதளவாசிகள் ஒன்று திரண்டு #GetWellSoonSPBSIR என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து பிரார்த்திப்பது இதுவே முதல்முறையாகும்.

எஸ்.பி.பிக்காக உருக்கமான வேண்டுதலில் ஈடுபட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், எஸ்.பி.பி பாடிய வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் என்ற பாடலை பதிவிட்டு…. “இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்.. சீக்கிரம் எழுந்து வாருங்கள் SPB சார் உங்களுக்காக காத்திருக்கிறோம் #GetWellSoonSPBSIR” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், நந்தா படத்தில் வரும் முன் பனியா முதல் மழையாஎன் மனதில் ஏதோ விழுகிறதேவிழுகிறத. முன் பனியா முதல் மழையா… என்ற பாடலை பதிவிட்டு, எஸ்பிபி நலம்பெற உருக்கமாக வேண்டியுள்ளார்.

நடிகை ஆரத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கடவுள் கண்டிப்பாக அதிசயத்தை நிகழ்த்துவார். அனைவரின் அன்பும், பிரார்த்தனையும் எஸ்.பி.பி.யை விரைவில் நலம்பெற செய்யும் என குறிப்பிட்டு பின்னணியில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி… என்ற பாடலை ஒலிக்கவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே