பாரத ரத்னா விருதைக் காட்டிலும் மகாத்மா காந்தி உயர்வானவர் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காந்திக்கு அந்த விருதை வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மகாத்மா காந்தி நமது தேசத்தின் தந்தை என்றும்; அவர் மீது நாட்டு மக்கள் மிகப்பெரும் மரியாதை வைத்துள்ளனர் என்றும் கூறிய நீதிபதிகள், அவர் அங்கீகாரத்துக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் என்றும் தெரிவித்தனர்.
காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட மறுத்ததுடன், இதுகுறித்து மத்திய அரசை அணுகும்படியும் மனுதாரரை கேட்டுக் கொண்டு, அவரது பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.