மகாராஷ்டிராவிற்கு தேவை நிலையான அரசு தான் கிச்சடி அரசு அல்ல என்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.
மீண்டும் முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்றார். தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவாருக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற பட்னாவிஸ் செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது, பாஜக கூட்டணிக்கு தான் மக்கள் ஆதரவளித்தார்கள். ஆனால் சிவசேனா மக்களின் ஆதரவுக்கு எதிரான கூட்டணியை அமைக்க முயற்சித்தார். முதல்வராக மீண்டும் வாய்ப்பளித்த மக்களின் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை. மக்கள் விரும்பவது நிலையான அரசை தான், கிச்சடி அரசை அல்ல என்றும் கூறினார்.