மகாராஷ்டிராவில் பாஜக அரசிற்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கிடையாது என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.
பாஜகவிற்கு ஆதரவு அளித்தது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு.
அஜித் பவாரின் இந்த முடிவிற்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்காது என்று சரத் பவார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக அரசிற்கு அஜித் பவார் ஆதரவு கொடுத்ததையடுத்து முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றனர்.
இந்நிலையில் சரத் பவார் பாஜகவிற்கு ஆதரவு இல்லை என்பது மகாராஷ்டிரா அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.