சினிமா கூத்தாடிகள் தமிழ்நாட்டிற்காக ஒன்றும் செய்ய முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேட்டபோது, ரஜினி தனது பட விளம்பரத்திற்காக மட்டுமே அரசியல் பேசுகிறார்; சினிமா கூத்தாடிகள் தமிழ்நாட்டிற்காக ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்பம் குறித்து கேட்டபோது அதுபற்றி தனக்கு தெரியாது என பதிலளித்தார்.
ரஜினி-கமல் இணைவதாக தெரிவித்தது குறித்த கேள்விக்கு, சினிமா வசனங்கள் கேட்டு கேட்டு அலுத்துவிட்டது என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
சசிகலா இன்னும் ஒன்று அல்லது ஒன்றைரை ஆண்டுக்குள் விடுதலையாகி வருவார்.
கட்சியை நல்ல முறையில் அமைப்புகளோடு நடத்த சசிகலாவுக்கு திறமை உள்ளது.
அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.