வேலம்மாள் கல்விக் குழுமத்தில் அதிரடி வருமான வரி சோதனை

சென்னை மற்றும் மதுரையில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது வேலம்மாள் கல்விக் குழுமம்.

இதன் கீழ் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் என சென்னை, மதுரையில் மட்டும் 30 கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இதன் சேர்மனாக முத்துராமலிங்கமும், நிர்வாக இயக்குநராக வேல்முருகனும் செயல்பட்டு வருகின்றனர்.

இங்கு மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பது பெற்றோரின் கனவாக இருந்தாலும் சீட் கிடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல எனும் அளவிற்கு இந்த கல்விக் குழுமம் மிகப் பிரபலமானது.

நீட் பயிற்சி மையங்களையும் வேலம்மாள் கல்விக் குழுமம் நடத்தி வருகிறது. இங்கு மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

இதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள், வீடு, அலுவலகங்கள் என 50 இடங்களில் காலை 10.30 மணிக்கு வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர்.

ஒரு இடத்தில் 5 முதல் 10 அதிகாரிகள் என மொத்தம் 150 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே