தங்க விலை நேற்று ஏற்றத்தை சந்தித்தைத் தொடர்ந்து இன்று உயர்ந்திருக்கிறது.

கடந்த ஆண்டு இறுதி வரையிலுமே ரூ.30 ஆயிரத்துக்குள்ளாக இருந்து வந்த தங்க விலை, ஊரடங்கு காலத்தின் போது வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது.

சுமார் ரூ.43 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்த தங்க விலை, நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.50 ஆயிரத்தை எட்ட வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தங்க விலை கணிசமாக குறைந்து வந்து, தற்போது ரூ.38 ஆயிரத்தில் நீடிக்கிறது.

இந்த நிலையில், நேற்று அதிரடியாக ஏற்றத்தை சந்தித்தைத் தொடர்ந்து இன்றும் உயர்ந்திருக்கிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,834க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி தங்க விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.38,672க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60க்கு விற்பனையாகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே