கிரிக்கெட் : காயமடைந்த இஷாந்த் ஷர்மா…

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற போது வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அடுத்த மாதம் துவங்கவுள்ள நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இவர் பங்கேற்பது சந்தேகம் என தெரிகிறது.

நியூசிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 5 டி-20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதன் முதல் டி-20 போட்டி ஆக்லாந்தில் வரும் 24ஆம் தேதி துவங்குகிறது.

இத்தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏற்கனவே நியூசிலாந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதற்காக அவர் 6 வார ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இஷாந்த் பங்கேற்பது சந்தேகம் என தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே