பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு நேரம் அதிகரிப்பு!

புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேரத்தை மூன்று மணி நேரமாக உயர்த்தி பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.

புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால் தேர்வு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று 10 மற்றும் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி 600 மதிப்பெண்களுக்கு நடைபெறும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும், 500 மதிப்பெண்களுக்கு நடைபெறும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கும் 3 மணி நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே