Sunனோட Sonக்கே தடையா?போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி படத்துடன் SUNனோட SONக்கே தடையா என்ற வாசகங்களுடன் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திமுக-வில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவரது அரசியல் நடவடிக்கைகள் முடங்கிப் போயிருக்கின்றன.

இந்த நிலையில் வருகிற 30ஆம் தேதி வரவுள்ள மு.க. அழகிரியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.

இதனையொட்டி மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக SUN னோட SON க்கே தடையா? ஒற்றுமையோடு இருந்து ஒன்றாய் பயணிப்போம்..!!!!

ஆசையில் அபாயகரமானது அதிகார ஆசை என்ற வாசகங்களுடன் இடம்பெற்றுள்ள அந்த போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே