தமிழக சைவ மற்றும் அசைவ ஹோட்டல் உரிமையாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் சிகரம் சாஃப்ட்வேர் டெக்னாலஜி இடையே FOODEX என்ற செயலியை தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆன்லைன் டெலிவரி செயலிகள் மூலம் உணவுகள் விற்பனை செய்யப்படுவதால் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு 40 சதவீதம் வரை நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக சைவ மற்றும் அசைவ ஹோட்டல்கள் உரிமையாளர் சங்கம் FOODEX என்ற செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலியின் மூலம் மிக குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த செயலியை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அறிமுகம் செய்து வைத்தார்.