தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை வர்த்தக ரீதியாக பதிவேற்றம் செய்தாலோ, பதிவிறக்கம் செய்தாலோ 10 ஆண்டுகளுக்கு மேலான கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இளம்பெண் தொழில்முனைவோருக்கான வழிகாட்டும் இரண்டு நாள் கருத்தரங்கம் தொடங்கியுள்ளது.
இதில் கலந்து கொண்ட ஏடிஜிபி ரவி குழந்தைகள் ஆபாச படங்கள் இணையதளத்தில் பகிர்ந்ததாக, கோவையில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்பவர்கள், ஆபாச படம் பார்க்கும் மனநிலையில் இருந்தால் அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் ஆபாச படத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலான கடும் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் ஏடிஜிபி ரவி கூறினார்.