லாக்-அப் என்கவுன்ட்டர் விவகாரம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் லாக்-அப் என்கவுன்ட்டர் விவகாரத்தில் எஸ்.ஐ.க்கு ஆயுள் தண்டனை கொடுத்து நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனையுடன் இரண்டு லட்ச ரூபாய் அபராதத்தையும் நீதிமன்றம் விதித்திருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்த சையது முகமதுவை, சத்தேகத்தின் பேரில் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

விசாரணையின்போது காவல் நிலயைத்தில் சையது முகமதுவை, சார்பு ஆய்வாளர் காளிதாஸ் சுட்டுக்கொன்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், காளிதாஸை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், காவல்துறை சார்பு ஆய்வாளர் காளிதாஸுக்கு ஆயுள்தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி சண்முகம் உத்தரவிட்டார்.

அபராதத் தொகையை சுட்டுக்கொல்லப்பட்ட சையது முகமதுவின் குடும்பத்திற்கு வழங்குமாறும் அறிவுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே