திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு அனைத்துக் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.  

மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர், ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அப்போது பதிலுக்கு பிரதமரின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார்.

ஏப்ரல் 8-ம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்றும் மு.க.ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை திமுக வழங்கும் என்றும் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் தெரிவித்தார்.

இந்திய குடிமக்கள் அனைவருக்கும், மத்திய அரசு அரணாக இருக்க வேண்டும் என்றும், பிரதமரிடம் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மத்திய அரசு கவனமாக செயல்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே