தமிழகத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத கனமழைக்கான எச்சரிக்கைவிடுத்துள்ளது. 

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்துவருகிறது. \

அதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ள நிலையில் தென் மேற்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் இதன் காரணமாக ஏற்கெனவே பெய்து வரும் கன மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று நண்பகல் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு செய்தி குறிப்பில் தமிழகத்திற்கு அதீத கன மழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசனைத் தொடர்பு கொண்ட போது, தமிழகத்தில்ஆறு மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் புதுவையில் கன மழை முதல் மிக கன மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே