42 சதவீதம் கட்டணங்களை உயர்த்திய ஏர்டெல், வோடஃபோன்!

வோடஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பிரிபெய்ட் எண்ணுக்கான கட்டணத்தை 42 சதவீதம் வரை உயர்த்துகின்றன.

ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நிறுவனங்களின் பிரிபெய்ட் எண்களுக்கான கட்டணங்கள் ஒரே அளவில் இருந்து வந்தன.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வோடபோன் தற்போது பிரிபெய்ட் எண்களுக்கான டேட்டா மற்றும் கால்களுக்கான கட்டணத்தை 42 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இன்றுதான் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 3-ம் தேதி முதல் அந்த விலை உயர்வு நடைமுறைக்குவருகிறது.

அதேபோல வோடபோன் பிற நிறுவன எண்களுக்கு செய்யப்படும் அவுட் கால்களுக்கு நிமிஷத்துக்கு ஆறு பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது ஏர்டெல்லும் பிரிபெய்ட் எண்களுக்கான கட்டணத்தை 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக ஏர்டெல் அன்லிமிடெட் கால்கள் மற்றும் டேட்டா பேக் விலை 28 நாள்களுக்கு 249 ரூபாயும், 82 நாள்களுக்கு 448 ரூபாயும் இருந்தது.

  • தற்போது அந்த பேக்கின் விலை 298 ரூபாயாகவும், 598 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கான குறைந்தபட்ச ரீஜார்ஜ் 35 ரூபாயிலிருந்து 49 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பிற நெட்ஓர்க் எண்களுக்கு செய்யப்படும் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வோடபோனில் 84 நாள்களுக்கான டேட்டா, அன்லிமிடேட் கால்கள் பேக் 458 ரூபாயிலிருந்து 599 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

28 நாள்களுக்கான டேட்டா, அன்லிமிடேட் கால்கள் பேக் 199 ரூபாயிலிருந்து 249 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே