நமஸ்தே டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் பட்டியலிட்டு, ராகுல் காந்தி விமர்சனம்

நமஸ்தே டிரம்ப், மெழுகுவர்த்தி ஏந்துதல், ராஜஸ்தான் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் தான் கொரோனா காலத்தில் பிரதமர் மோடி அரசின் சாதனைகள் என ராகுல் கிண்டலடித்துள்ளார்.

ஆளும் பா.ஜ., அரசு மீது, சமீபகாலமாக காங்., எம்.பி., ராகுல் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

எல்லை பிரச்னை, பொருளாதாரம், கொரோனா குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்.

இந்நிலையில், இந்தியாவின் அடிப்படை தேவைகளை மத்திய அரசு மாற்றியமைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள ராகுல், மத்திய அரசின் தற்சார்பு கொள்ளை குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டதாவது:

கொரோனா காலத்தில் அரசின் சாதனைகள்:

* பிப்ரவரி: நமஸ்தே ட்ரம்ப்

* மார்ச்: ம.பி., ஆட்சி கவிழ்ப்பு

*ஏப்ரல்: மக்களை மெழுகுவர்த்தி ஏற்றச்செய்தல்

* மே: அரசின் 6ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

* ஜூன்: வீடியோ கான்பரன்ஸ் வழியாக பீகார் தேர்தல் பிரசாரம்

* ஜூலை: ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க முயற்சி

இந்த சாதனைகளால், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தற்சார்பு எய்தியது. இவ்வாறு ராகுல் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே