தமிழகம் வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் பாதுகாப்பு குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை

பிரதமர் மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமிழகம் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாமல்லபுரத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சீன அதிபர் ஜீ ஜிங்பிங் வரும் 11ஆம் தேதி மாமல்லபுரம் வருகை தருகின்றனர்.

இருவரும் மாமல்லபுரம் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றி பார்ப்பதோடு இரு நாடுகளிடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றனர்.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், காவல்துறை டிஜிபி திருப்பதி, முப்படை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே