தமிழகத்தில் அரசு மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கடைசியாக 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், பாட்டில்கள் அளவு மற்றும் மது ரகங்களை வகைகளுக்கு ஏற்ப, 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு பீர் விலை உயர்த்தப்படுகிறது.

மதுபான விலையுயர்வு மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 3100 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே