அண்ணாவின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம் – டிடிவி தினகரன்

நம் கொள்கைத்தலைமகன், தமிழ்த்தாயின் தவப்புதல்வன், அறிவுலகத்தின் ஆசான், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்கிடுவோம் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ” இந்த நன்னாளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்!

நம் அன்புத்தாய் இதயதெய்வம் அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை மீண்டும் ஏற்படுத்திட சபதம் ஏற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த அவரது புகைப்படத்திற்கு தினகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

அவருடன் கட்சி பொருளாளர் வெற்றிவேல் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் சிஆர் சரஸ்வதி உடன் இருந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே