புதுச்சேரியில் முதல்வர் என். ரங்கசாமி மற்றும் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு முதல்வர் என்.ரங்கசாமி எம்எல்ஏவாக பதவி ஏற்றார். அவருக்கு தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் க.லட்சுமி நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சார்ந்த எம்எல்ஏக்கள், சுயேட்சை எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். இதனிடைய நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமனம் செய்யப்பட்ட(பாஜக) உறுப்பினர்கள் அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அனைவருக்கும் தற்காலிக பேரவைத் தலைவர் லக்ஷ்மிநாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
எளிமையாக நடைபெறும் இந்த நிகழ்வில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை தவிர்த்து மீதமுள்ள 32 எம்எல்ஏக்கள் (நியமன எம்எல்ஏக்கள் சேர்த்து) பதவி ஏற்கின்றனர்.