வெட்டி வா என்றால் கட்டி வருபவர்கள் திமுகவினர் – முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கலைஞர் அரங்கத்தில் திமுக முப்பெரும் விழாவில் கட்டி வா என்றால் வெட்டி வருபவர்கள் திமுக தொண்டர்கள் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை கலைஞர் அரங்கத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இவ்விலையில் கழக தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

அப்போது, ‘எல்லோரும் நம்முடன்’ என்ற திமுக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி, திமுகவில் இணைய விரும்புபவர்கள் https://www.dmk.in/joindmk/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து உறுப்பினர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, திமுகவில் உழைத்தவர்களுக்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டது.

இதில், முனைவர் அ.ராமசாமிக்கு அண்ணா விருதும், தஞ்சை எஸ்.என் உபயத்துல்லாவுக்கு கலைஞர் விருதும் வழங்கினார் முக ஸ்டாலின்.

பின்னர் பேசிய ஸ்டாலின், கட்டி வா என்றால் வெட்டி வருபவர்கள் திமுக தொண்டர்கள் என்று தெரிவித்தார்.

கொரோனா வைரசால் ஒரு உயிர் கூட போகாது என்ற சொன்னவர் முதல்வர். ஆனால், 8,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சம் என்பதுதான் அதை தடுக்கும் லட்சணமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்ட கொரோனா புள்ளி விவரங்களிலாவது உண்மையா? அதிலும் பொய்கள். கொரோனாவை விட கொடிய ஊழலரசு கோட்டையில் இருக்கிறது. முதல்வர் என்ன சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் உங்கள் பாட்சா பலிக்காது.

நீட் தேர்வை எதிர்க்க முடியவில்லை, இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் தெளிவு இருக்கிறதா? மாநிலத்துக்கு வந்து சேரக் கூடிய நிதியை பெற முடியுமா? சி.ஏ.ஏ.வை எதிர்த்தீர்களா? என பல குற்றசாட்டுகளை முன் வைத்தார்.

தமிழக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். இதுதான் முப்பெருவிழா சபதம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் 13 மாணவர்கள் தற்கொலைக்கு முதல்வர் பழனிசாமி தான் காரணம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

7 மாதங்களில் திமுக ஆட்சி என நாடே சொல்கிறது. மேலும், திமுகவில் உழைத்தவர்களுக்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், முனைவர் அ.ராமசாமிக்கு அண்ணா விருதும், தஞ்சை எஸ்.என் உபயத்துல்லாவுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே