பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்: பிரதமர் மோடி அதிரடி

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக பேசியுள்ளார்.

ஹரியானாவில் வரும் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சார்கி தாத்ரி என்ற இடத்தில் பிரமாண்டமான பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 70 ஆண்டுகளாக ஹரியானா விவசாயிகளுக்கான தண்ணீர் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

அந்த தண்ணீர் இந்தியாவுக்கும், ஹரியானா விவசாயிகளுக்கும் ஆனது என்று அவர் சுட்டிக் காட்டினார். பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீரை நிறுத்த போவதாகவும், அதற்கான பணிகளை தொடங்கி விட்டதாகவும் மோடி கூறினார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் உலகம் முழுவதும் பல தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாக பிரதமர் சாடினார்.

கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வந்தது குறித்தும், அவருடனான உரையாடல்கள் குறித்து மோடி நினைவுகூர்ந்தார்.

ஜி ஜின்பிங் DANGAL திரைப்படம் பார்த்ததாக தன்னிடம் கூறியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே