மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் கனவை நனவாக்க மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அப்துல் கலாமின் 88வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், அப்துல் கலாமின் கனவுகளை அழியாமல் பாதுகாப்பது நமது கடமை என தெரிவித்தார்.