கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறைவு

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவுற்ற நிலையில் அதற்காக தோண்டப்பட்ட 54 குறிகளும் இன்று மூடப்பட உள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில், ஏற்கனவே நான்கு கட்டங்களாக நடந்து முடிந்த அகழாய்வில் பழந்தமிழர்களின் நாகரீகத்திற்கு சாட்சியாக ஏராளமான பொருள்கள் கிடைத்தன.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 13ம் தேதி கீழடியில் 5ம் கட்ட ஆய்வு பணிகள் தொடங்கின.

அகழ்வாராய்ச்சிக்காக 54 குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில் செங்கல் கட்டுமான சுவர்கள், உறைகிணறுகள், நீர்வழிச் சாலைகள், வேலைப்பாடுகள் நிறைந்த சுடுமண் சிற்பங்கள் என பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மேம்பட்டவர்கள் தமிழர்கள் என்பதற்கான எண்நூற்றுக்கும் அதிகமான சான்றுகள் கிடைத்தன.

அகழாய்வு நடத்தப்படும் பகுதிகளில் சுமார் 2 லட்சம் பேர் பார்வையிட்டனர்.

இந்த அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஓரிரு வாரங்களில் மதுரை திருமலை நாயக்கர் மகாலில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

6ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஜனவரி 15ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே