கொரோனா பாதிப்பால் ஒவ்வொரு துறைகளிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய தனிக்குழுக்கள் அமைப்பு!

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு துறைகளிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநரும், பொருளாதார மீட்பு குழுவின் தலைவருமான ரங்கராஜன் தலைமையில் நடத்த முதல் கூட்டதில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக பொருளாதாரத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்கவும், மறுக்கட்டமைப்பு செய்வதற்காகவும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னை ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. 

இதில் நிதி, வேளாண் உள்ளிட்ட 10 துறை செயலாளர்கள், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி, வங்கித்துறை அதிகாரிகள், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனர் சீனிவாசன், முருகப்பா குழும நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, குறுகிய காலத்தில் மேம்படுத்துவது, உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் தலைவர் ரங்கராஜன், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு துறைகளிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே