மே 1, 2-ம் தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை..!!

மே 1 மற்றும் 2 ஆகிய இரு தேதிகளிலும் முழு ஊரடங்கை அறிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை போன்ற தேர்தல் பணிகள் தொடர்பான வேலைகளுக்கு மட்டுமே அன்றைய நாள்களில் அனுமதி வழங்கலாம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், அதற்கு முந்தைய நாளில் மக்கள், அரசியல் கட்சியினர் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.

மக்கள் அதிகளவில் கூடினால் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அதனைத் தடுக்கும் நோக்கில் மட்டுமே அன்றைய நாள்களில் ஊரடங்கை பிறப்பிக்க நீதிமன்றம் பரிந்துரைப்பதாகவும், இதில் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை என்றும் நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

இதனிடையே முழு ஊரடங்கு தொடர்பாக ஏப்ரல் 28-ம் தேதியன்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே