LATEST NEWS : சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட முடியாது என பிந்து, பாத்திமா ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்‌பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு தடையில்லை என சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது.

இதற்கு பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

மேலும் சீராய்வு மனுவின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டதால், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது என கேரள அரசும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

அதோடு சபரிமலைக்கு வர விரும்பும் பெண்கள் உச்சநீதிமன்றத்தின் அனுமதி கடிதத்தை கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருந்தது.

இதனிடையே மீண்டும் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக வந்த சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் மற்றும் அவருடன் வந்த பிந்து என்பரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதில் பிந்துவின் முகத்தில் பக்தர் ஒருவர் மிளகு தூள் ஸ்பிரே அடித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சபரிமலை செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி பிந்து மற்றும் பாத்திமா ஆகியோர் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட முடியாது என பிந்து, பாத்திமா ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போதைய சூழலில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது முடியாத காரியம் எனவும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே