நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு…!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில், மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பல முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குடியுரிமை சட்டதிருத்த மசோதா, பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு மட்டுமே எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வழங்கும் சட்டதிருத்த மசோதா, எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.

வாடகைத் தாய் முறையை வணிகரீதியாக பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா மாநிலங்களவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு, எதிராக மக்களவையில் பாஜக பெண் எம்.பி.க்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே