“இஸ்லாமிய மக்களை தூண்டிவிடுவது அற்பத்தனம்”: ராஜேந்திர பாலாஜி

இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை தமக்கு எதிராக திருப்ப முயற்சிப்பதாக திமுக மீது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டி உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் திமுக தூண்டிவிடுவது அற்பத்தனமானது என்றும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாம் இருப்பதாக திமுக சித்தரிப்பதாகவும் கூறியுள்ளார்.

மதத்தை வைத்து பரப்புரை செய்யும் திமுகவை மக்கள் புறந்தள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே