மக்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு..!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவ்வில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் தொடர்பான பிரச்னையை மக்களவையில் எழுப்பிய காங்கிரஸ் கட்சி பின்னர் வெளிநடப்பு செய்தது.

மக்களவை தொடங்கியதுமே பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, ஐதராபாத் மற்றும் உன்னாவ்வில் நடந்த பாலியல் வல்லுறவு வழக்குகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.

மக்கள் தரப்பில் இருந்தும் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தபோதிலும், கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வேதனை தெரிவித்தார்.

மேலும் உத்தரப் பிரதேசத்தை உத்தம பிரதேசமாக ஆக்குவேன் எனக் கூறியவர் அதை மோசமான பிரதேசமாக மாற்றி விட்டனர் என ஆவேசமாக பேசிய பின், அதிர் ரஞ்சன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே