ஆடை மாற்றுவது போன்று புருஷனை மாற்றும் வனிதாவுக்கு புரியாது: லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

ஆடையை மாற்றுவது போன்று புருஷனை மாற்றுபவருக்கு திருமணம், கமிட்மென்ட், கேரக்டர் பற்றி புரியாது என்று வனிதா பற்றி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை திருமணம் செய்தது குறித்து நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்வீட் செய்தார். அதை பார்த்த வனிதா அவரை விளாச மன்னிப்பு கேட்டதுடன், தான் போட்ட ட்வீட்டுகளை நீக்கினார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை கண்டபடி பேசிவிட்டார். அந்த பேட்டியில் வனிதா கூறியதாவது,

உன்னை கிழிக்கத் தான் ஆன்லைனுக்கு வந்தேன். இது குழாயடி சண்டை தான். நீ என்ன பெரிய ஹைகோர்ட் ஜட்ஜா?. சரி தான் போடி. உனக்கு குடும்பம் இல்லையா. நீ இயக்குநராக இருந்தால் படம் எடுடி என் வாழ்க்கையில் ஏன் தலையிடுகிற . நீ ரொம்ப பத்தினி. ஒருத்தனுக்கு ஒருத்தினு டிராமா போடாத. ஒரு புருஷன் இருப்பதால் நீ பெரிய ஒழுங்கா. யாருடி நீ, முடிந்தால் காவல் நிலையத்திற்கு வா. அப்படி தான்டி பேசுவேன் என்றார்.

பேட்டியை பார்த்த பலரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்காக பரிதாபப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு எச்சரிக்கை விடுத்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் வனிதா கூறியிருப்பதாவது,

என் வாழ்க்கையில் இனியும் தலையிட முயற்சி செய்தால் உங்களின் வாழ்க்கையை இந்த சமூகத்திற்கு ஆதாரத்துடன் எக்ஸ்போஸ் செய்வேன் என்று கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணனை எச்சரிக்கிறேன். சினிமா துறையில் நடிகையாக இல்லாதது போல் கஸ்தூரி செயல்படுகிறார் என்றார்.
இந்நிலையில் வனிதா எச்சரிக்கை விடுத்து ட்வீட்டியதை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது,

உங்களுக்கு திருமணம், கமிட்மென்ட், கேரக்டர் என்பதன் அர்த்தம், ஸ்பெல்லிங்காவது புரியுமா?. 36 ஆண்டுகள் என்னுடன் வாழும் என் கணவர் டாக்டர் ராமகிருஷ்ணன் பற்றி நீ யாரு பேச?. ஆடையை மாற்றுவது போன்று புருஷனை மாற்றுபவருக்கு புரியாது. உங்களை பார்த்து பாவப்படுகிறேன்.

குழந்தைகளுக்கு முன்மாதிரியாக வாழ்வது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?. கணவன், மனைவி உறவு குறித்து உங்கள் பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள்?. மற்றவர்களும் உங்களை போன்று தான் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டோம். உங்களை போன்ற சாக்கடை என்னை அசிங்கப்படுத்த முயற்சி செய்வதா, அது ஒருபோதும் நடக்காது என்றார்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ட்வீட்டுகளை பார்த்த ஆதரவாளர்கள் கூறியிருப்பதாவது,

லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோருக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். தயவு செய்து வனிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும். பேட்டியில் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் பேசியிருக்கிறார். வனிதாவுக்கு தான் பெரிய டான் என்று நினைப்பா?.
வனிதா செய்வதை எல்லாம் பார்க்கவே மோசமாக இருக்கிறது. வனிதாவுக்கு தைரியம் இருந்தால் இதே போன்று சூர்யா தேவியிடம் பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம். தயவு செய்து வனிதாவை பிளாக் பண்ணுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
தன் ஆதரவாளர்கள் போட்ட ட்வீட்டுகளை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்,

அனைவருக்கும் நன்றி. நான் அப்பாவி பெண்கள், குழந்தைகளுக்கு உதவி செய்ய முன்வந்த போது இது போன்று நான் பல முறை பார்த்திருக்கிறேன். கேரக்டர் இல்லாத இது போன்றவர்கள் அனைவரும் அவர்களை போன்று என்று நினைக்கிறார்கள். தாங்கள் எஸ்கேப் ஆக அவர்களின் சேற்றை அடுத்தவர்கள் மீது வீசப் பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே