டி.கே.சிவக்குமாருடன் குமாரசாமி சந்திப்பு

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமாரை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார்.

சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் மீது அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமலாக்கத் துறை விசாரணைக்கு பிறகு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் திகார் சிறையில் டி.கே.சிவகுமாரை, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, அரசியல் பழிவாங்கும் நோக்கில் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சித்தார்.

மேலும் சிவக்குமார் மனரீதியாக திடமாக இருப்பதாகவும், இந்த வழக்கை எதிர்த்து போராடுவார் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே