அயோத்தி சமரச குழுவிற்கு அரவிந்தர் ஆசிரமம் கடிதம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நடுவர் குழுவில் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய நலனை கருத்தில் கொண்டு அயோத்தியில் தங்களுக்கு சொந்தமாக உள்ள 3 ஏக்கர் நிலத்தை வழங்க தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தி பிரச்சினையில் சமரச தீர்வு ஏற்பட்டால், நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பிற்கு பின் மத்திய அரசு கையகப் படுத்தியுள்ள 67 ஏக்கர் நிலத்தில் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலமும் அடங்கியுள்ளது.

ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சமரச குழுவிற்கு புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் எழுதியுள்ள கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே