இந்தூர் ஹோட்டலில் பயங்கர தீ

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே தனியார் சொகுசு விடுதியில் பெரும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஜய் நகரில் உள்ள கோல்டன் சொகுசு விடுதியில் இன்று காலை நிகழ்ந்த பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை முழுவதுமாக அணைத்தனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயமேதும் ஏற்படாத நிலையில், தீவிபத்தின் போது ஹோட்டலின் உள்ளே சிக்கிக் கொண்ட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே